ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆசி பெற சென்றநிலையில் அவர் முன்பாகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை என கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி கெப்பிடியாகொட சிறிவிமல தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களிடம் கோரிய அனைத்து அதிகாரங்களையும் மக்கள் வழங்கியுள்ளதாகவும் ஆனால் வாக்குறுதி அளித்தபடி இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை எனவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.
“இவர்களுக்கு இங்கு கயிறு இழுத்தல் நடைபெறுகிறது. அதிகாரத்தை பிரித்துக் கொள்ள முடியவில்லை. போதுமான அளவு அதிகாரம் கொடுத்தனர். 19வது திருத்தத்தை மாற்ற வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரம் கொடுத்தனர். மூன்றில் இரண்டு கேட்டனர். அதனையும் கொடுத்தனர். இன்னும் என்ன கொடுக்க உள்ளது? மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறித்து நினைத்துப் பார்க்கவே முடியாது.
அதிகாரம் பெற்றுக் கொடுத்தல் அதனை வைத்து வேலை செய்ய வேண்டும். இவர்களுக்கு அந்தளவு தெரியாதா? தேவை இல்லையா? தேவை இருப்பது தமது மடியை நிரப்பிக் கொள்ள மாத்திரமே. தொடங்கும் போது ஒரே நாடு ஒரே நீதி ஒரே குடும்பம் என்றனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. பார்க்கும் போது ஒன்றும் செய்ததில்லை. மக்கள் எங்களையும் திட்டுகின்றனர்.அரசாங்கம் காடழிக்கவில்லை என கூறுகிறது. அடுத்த நிமிடமே காடழிப்பு தொடர்பில் தொலைக்காட்சியில் செய்தி வருகிறது. இந்த பொய் கூடாது. நேரடியாக வேலை செய்யவே அதிகாரம் கொடுத்தனர். அதனால் பொய் சொல்ல வேண்டியதில்லை” என தேரர் தெரிவித்தார்.