சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கற்றேன் -வீரேந்தர் சேவக்!

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கற்றேன் -வீரேந்தர் சேவக்!

சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து தான் பேக்ஃபுட் பஞ்ச் மற்றும் ஸ்டெரைட் டிரைவ் போன்ற ஷாட்களை ஆட கற்றுக்கொண்டேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார் சேவக்.

ஸ்டெரைட் ட்ரைவை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக மனம் திறந்து பேசியிருக்கிறார் வீரேந்தர் சேவக், மேலும் தற்போதைய டெக்னாலஜி என் காலத்தில் இருந்திருந்தால் இன்னும் குறைந்த வயதிலேயே கிரிக்கெட் விளையாட வந்திருப்பேன் என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.

டி-20 போட்டிகள் அதிகரித்ததன் காரணமாக தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் அதிரடிக்கு மாறியிருக்கின்றன. ஆனால் 90-ஸ் கிட்களிடையே அதிரடி மன்னனாக வலம் வந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் வீரேந்தர் சேவக் தான்.. இவரின் அதிரடி காரணமாக டெஸ்ட் போட்டிகளே, ஒரு நாள் போட்டிகள் அளவுக்கு விருவிருப்பாக சென்றன. சேவக் ஆடுகிறார் என்றால் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதற்கே டிவி முன்பு ரசிகர்கள் தவம் இருந்தனர்.

1999ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளிலும் 2001ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமான வீரேந்தர் சேவக் 2013ம் ஆண்டு வரை சுமார் 14 ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமானதாக்கியிருந்தார்.

Circuru என்ற செயலியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய சேவக், 1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்து தான் கிரிக்கெட்டின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து தான் பேக்ஃபுட் பஞ்ச் மற்றும் ஸ்டெரைட் டிரைவ் போன்ற ஷாட்களை ஆட கற்றுக்கொண்டேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நவீன காலத்திய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசிய சேவக், இது போன்ற தொழில்நுட்பம் என் காலத்தில் இருந்திருந்தால் இன்னும் குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆட வந்திருப்பேன் என்று கூறினார்.. “இன்று இணையத்தில் கிரிக்கெட் தொடர்பான பல வீடியோக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் இக்கால தலைமுறை வீரர்கள் கிரிக்கெட் மற்றும் நுட்பங்கள் குறித்து விரைவாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. இதெல்லாம் என் காலத்தில் இருந்திருந்தால் நானும் விரைவாகவே நுட்பங்களை கற்றுக்கொண்டு விளையாட வந்திருப்பேன்” என்றார் சேவக்.

நான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப நாட்களின் என்னுடைய கால் நகர்வுகள் அவ்வளவு சரியானதாக இல்லை என்று பலரும் விமர்சித்தனர், ஆனால் யாரும் அதற்கான ஆலோசனைகளை தரவில்லை. பின்னர் மன்சூர் அலி கான் பட்டோடி, சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் தான் எனக்கு கால் நகர்வுக்கான ஆலோசனை தந்து உதவினர் என்றார்.ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு இரட்டை செஞ்சுரிகளும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதமும் எடுத்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக விளங்கும் சேவக் 1991ம் ஆண்டு தன்னுடைய 21வது வயதில் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் இந்திய அணிக்காக முதல் முச்சதத்தை சேவக் அடித்ததன் காரணமாக அவர் ‘சுல்தான் ஆஃப் முல்தான்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *