சஜித் அணியினரின் மனிதாபிமானச் செயல்…

சஜித் அணியினரின் மனிதாபிமானச் செயல்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது சம்பளத்தை கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த விடயத்தினை  சஜித் பிரேமதாஸ தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பிக்கவுள்ள விசேட நிதியத்திற்கு தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தனது சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஸ நாணயக்கார, முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தனது ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதிக்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தனக்கு கிடைக்கவுள்ள ஒகஸ்ட் மாத சம்பளத்தை முழுமையாக கொரோனா நிதியத்திற்கு வழங்கி விடுமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *