சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் அசேல சம்பத் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் அசேல சம்பத் கைது

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. இவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் விசாரணைகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எக்ஸ்ட்ரா செனொகா கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வந்து அதில் சில தரமற்ற திரவங்களை கலந்ததன் பின்னர் மக்களுக்கு செலுத்துவதாக அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிலியந்தல பகுதியில் வைத்து நேற்று (25) இரவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *