சம்சுங் அறிமுகப்படுத்தும் ‘ The First Look 2021‘

சம்சுங் அறிமுகப்படுத்தும் ‘ The First Look 2021‘

சும்சுங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சும்சுங் நிறுவனம் The First Look 2021 எனும் தலைப்பில் ஜனவரி 6 ஆம் திகதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில் புதிய டிவி மற்றும் இதர டிஸ்ப்ளே தொழிநுட்பங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

இந் நிகழ்வில் புதிய சாதனங்கள், தொழிநுட்பங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என சும்சுங் அறிவித்து உள்ளது. டீசர் படத்தில் மாணிட்டர்கள், தொலைகாட்சிகள் மற்றும் இதர டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

முன்னதாக இந்த ஆண்டு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சம்சும் நிறுவனம் QLED 8K டிவி, புதிய 88 மற்றும் 150 இன்ச் மைக்ரோ எல்இடி மொடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு சம்சுங் புதிய QLED 8K டிவி, தி செரிப் QLED டிவி மொடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சம்சுங் நிறுவனம் புதிய குவாண்டம் மினி LED டிவிக்களை 55, 65, 76 மற்றும் 85 இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுதவிர டேப்லெட்கள், மடிக்கணினி மொடல்களை சம்சுங் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *