கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு தந்தி அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இலவசக் கல்வி மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் சதுர சமரசிங்கவை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தந்தி அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரொபர்ட் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஓகஸ்ட் 11ஆம் திகதி தந்தி அனுப்பி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்களால் அமைச்சருக்கு தந்தி அனுப்பி, சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்கவை பொய் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான முதல் தொழிற்சங்க நடவடிக்கை இதுவெனவும், அந்தக் குரலுக்கு செவிசாய்க்காமல் தொழிற்சங்கத் தலைவரை பொலிஸார் தொடர்ந்து பின்தொடர்ந்தால், மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமது சங்கம் அணிதிரளும் எனவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரொபர்ட் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.