காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் இரு நாடுகளின் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுத்ததன் இருநாடுகள் இடையிலான பதற்றம் தணிந்தது.இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் தற்போது நீக்கியுள்ளது.