இலங்கையிலிருந்து தொழில் தேடி வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்ற 41 இலங்கைப்பெண்கள் சவுதியில் காரணம் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.சவுதியின் ரியாத் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 18 மாதங்களாக இவர்கள் ரியாத்திலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த 41 பெண்களும் எதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. இவவாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் சிறு பிள்ளைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.