சாக்கடல் –THE DEAD SEA

சாக்கடல் –THE DEAD SEA

சாக்கடல் உலகத்திலே வழமைக்கு மாறானதும், கடல் மட்டத்திலிருந்து மிகவும் கீழாகவும் உள்ள ஒரு மாபெரும் நீர்த்தேக்கம் ஆகும். இது இஸ்ரவேல் நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1312 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. யோர்தான் நதியிலிருந்துமட்டும் ஒரு நாளைக்கு 6 மில்லியன் தொன் நீர் இதற்குள் பாய்கின்றபோதும் இதன் மட்டம் ஒருபோதும் குறைவதில்லை. புவியியல் ஆராட்சியாளர்கள் சாக்கடலின் அடியில் இருக்கும் பெரும் துளை அல்லது வெடிப்பின் மூலமாக நீர் பூமிக்குள் செல்கின்றது என நம்பியபோதும் அமெரிக்க கடற்படை ஆராட்சியாளர்கள் ஒலி அலை பரிசோதனை மூலம் அந்த நம்பிக்கையை நிராகரித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 6 மில்லியன் தொன் இதற்குள் பாய்கின்றபோதும் தேங்கிய நீர் வெளியேற வழிகள் வேறு இல்லாதபோதும் நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்கு அங்ககு உள்ள பாலைவனச் சூழ்நிலையும், விஸ்தீரணமும் (47 மைல் நீளமும் 9 மைல் சராசரி அகலமும்) காரணமாக நீர் அதிக அளவில் ஆவியாக வெளியேறுவதே காரணமாகும். அத்தோடு நீர் ஆவியாதல் காரணமாக அதன் செறிவு கூடுவதால் கடலில் உள்ள உப்புத் தன்மையைவிட ஏழு மடங்க்கு உப்புத் தன்மை காணப்படுகின்றது.

இதன் அடர்த்தி கூடவாக இருப்பதாலும் கனிப்பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதாலும் இதனுள் ஏவரும் மூழ்குவதில்லை, இங்கு எவரும் மிதந்துகொண்டு புத்தகம் வாசிக்க முடியும். இங்க்கு காணப்படுன் கனிப்பொறுட்செறிவு சாக்கடலை உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த இடமாக ஆக்கியுள்ளது. இந்த நீர்னிலையில் காணப்படும், வெடி பொருளாகவும் பசளையாகவும் பாவிக்கப்படுகின்ற பொட்டாசியத்தின்( ) அளவு இவ்வுலகம் முளுவதற்கும் தேவையான கனிப்பொருள் பசளையை 2000 வருடங்களுக்கு வினியோகிக்கப் போதுமானது.

மேலும் இங்கே ஏறக்குறைய 22 பில்லியன் தொன் மகனீசியம் குளோறைட்டும் (Magnesium Chloride), 12 பில்லியன் தொன் சாதாரண உப்பு ( Common Salt ), 6 பில்லியன் தொன் கல்சியம் குளோறைட்(Calcium Chloride ) 2 பில்லியன் தொன் பொட்டாசியம் குளோறைட் (Pottassium Chloride), 1 பில்லியன் தொன் மனீசியம் புறமேட்டும் (MagnesiumBromide) காணப்படுகின்றது. இதன் பெறுமதி அண்ணளவாக 1,270,000,000,000 டொலர் ஆகும். இஸ்ரவேல் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெறுமதி இந்தத் தொகையுடன் ஒப்பிடும்போது எம்மாத்திரம்?

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *