கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மோசடி தொடர்பில் இது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிறைவடைந்த நேற்றைய தினம் போலியாக பரீட்சைக்கு தோற் றிய ஒருவர் பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தரபரீட்சையில் ரஷ்ய மொழிப் பாடத்திற்கான பரீட்சையின் போது ஆள்மாறாட்டம் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய இம்முறை இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித்ரோஹண தெரி வித்தார்.
அத்துடன், இம்முறை பரீட்சையின் போது இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்ததாக ஏற்கனவே முல்லைத்தீவு , வலஸ்முல்ல மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளிலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மாணவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் பரீட்சை சார்ந்த சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.