அமெரிக்காவின் அனுபவமிக்க மூத்த சிரேஸ்ட இராஜதந்திரியான வில்லியம் பேர்ன்சை ஜோ பைடன் சிஐஏயின் புதிய இயக்குநராக நியமிக்கவுள்ளார்.சிஐயின் புதிய இயக்குநராக வில்லியன் பேர்ன்ஸ் நியமிக்கப்பட்ட பின்னர்அமெரிக்க மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என பைடன் தெரிவித்துள்ளார்.வில்லியம் பேர்ன்ஸ் அமெரிக்காவையும் அமெரிக்க மக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் நீண்டகாலமாக அனுபவமிக்க இராஜதந்திரி என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை அரசியல்மயப்படுத்தப்படாததாக காணப்படவேண்டும் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் எங்கள் நன்றியுணர்விற்கு உரியவர்கள் என்ற எனது ஆழ்ந்த நம்பிக்கையை வில்லியம் பேர்ன்ஸ் கொண்டுள்ளார் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.வில்லியம் பேர்ன்ஸ் ரீகன் நிர்வாகம் முதல் ஒபாமா நிர்வாகம் முதல் இராஜதந்திரியாக பணியாற்றிய அனுபவமிக்கவர்.
வில்லியம் பேர்ன்ஸின் நியமனம் உறுதிசெய்யப்பட்டால் இராஜாங்க திணைக்களம் குறித்த பழுத்த அனுபவமிக்க ஒருவர் சிஏயின் இயக்குநராக மாறும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.
வில்லியம் பேர்ன்ஸின் இராஜதந்திர அனுபவமும் டிரம்பிற்கு பிந்தைய யுகத்தில் சிஐஏயின் நம்பகத்தன்மையை மீண்டும் ஏற்படுத்த கூடிய அவரின் திறமை காரணமாகவுமே அவரை பைடன் சிஐஏயின் புதிய இயக்குநராக தெரிவு செய்துள்ளார்.