கொவிட் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஸ்ரீலங்காவின் அனுமதிக்காக சீனா காத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைத் தூதரகம் சீனாவின் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சீன அரசாங்கம் இலங்கைக்கு இரண்டு கட்டங்களாக 6 இலட்சம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் சீனாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்னமும் Sinopharm கொரோனா தடுப்பூசி அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.