இலங்கையில் அண்மையில் பல இடங்களில் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இந்த மாதத்தில் மட்டும் 4 ஆவது வெடிப்புச் சம்பவம் பாதிவாகியுள்ளது.இதேவேளை நேற்று (25) கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொட்டாவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுக் கலவையை முறையான அனுமதியின்றி மாற்றியதாகவும் அறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ஒரு வெப்ப மண்டல நாடாக இருப்பதால், வாயுக் கலவையில் குறைந்த சதவீத புரொப்பேன் மற்றும் அதிக சதவீத பியூட்டேன் இருக்க வேண்டும்.
இதனை அடுத்து, எரிவாயு கசிவு தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.மேலும் இவ்வாறு சிலிண்டர்கள் வெடிப்பதற்கான அதிர்ச்சி காரணம் இந்த காணொளியில் பாதிவாகியுள்ளது.