சீனாவிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு

சீனாவிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்து இலங்கை கையகப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் வரவு செலவினம் மீதான குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake)  தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும், தேசிய துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்கப்படவில்லை எனவும், 70 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அவ்வாறு கையகப்படுத்தும் சாத்தியம் இல்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், துறைமுகத்தை அப்படியே பராமரிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், பிரச்சினை ஏற்பட்டால் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *