சீனாவின் கொரேனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்திய நாடுகளில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மங்கோலியா, சிலி, செச்செல்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகள் கொரோனா பரவலைத் தடுத்து விரைவில் இயல்பு நிலையை அடையச் சீனாவின் சைனோபார்ம், சைனோவாக் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தின.
இந்நிலையில் சீனத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்திய நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.