இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என்கிறார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் இதனைத் தெரிவித்த அவர், இது இலங்கைக்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையல்ல எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“இலங்கைக்குள் சீனா செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கு என்பது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகின்றது.
சீனா தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தியும் மிரட்டியும் இயலக்கூடிய நாடுகளை கடன்கொடுத்து தனக்கு அடிமையாக்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றது.
இதனால், தமிழகத்திற்கு மிக அண்மையில் இருக்கக் கூடிய வடக்கு மாகாணத்திலும் தனது கால்களைப் பதிக்க சீனா முயற்சிக்கின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் என்பது இலங்கையிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஒரு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தலாம்” என எச்சரித்துள்ளா