கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக, வீட்டில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, தற்போது சியான் நகரில் தான் கடுமையான ஊரடங்கு அமுலாகியிருக்கிறது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம், பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில், சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.