சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார்.
ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை விதிக்கும் ‘உய்கர் கட்டாயத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்ட’ சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
அந்த மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவை என தொழிலகங்கள் உறுதிப்படுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று அந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,