சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் -சம்பிக்க ரணவக்க

சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் -சம்பிக்க ரணவக்க

அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அமெரிக்க டொலர் வடிவில் மேற்கொள்ளும் அனைத்து கொடுக்கல், வாங்கல்களையும் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு இடைநிறுத்துமாறு அனைத்துத் தனியார் வங்கிகளிடமும் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதற்கான காரணம் என்ன? கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிநாடுகளிடம் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்குக் காணப்பட்டது.

அதன்படி அந்தத்தொகையை 1 சதவீத வட்டிக்குப் பெற்றுத்தருமாறு மத்திய வங்கி நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளிடம் கோரியது. ஆனால் அதனை வழங்குவதற்கு எந்தவொரு வங்கியும் முன்வரவில்லை. ஆகவே பொருள் கொள்வனவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியின் ஊடாக கடனை மீளச்செலுத்தும் நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

தற்போது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் பணமில்லை. ரூபாவின் பெறுமதி மிகவேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

மத்திய வங்கியினால் கடந்த 15 நாட்களில் சுமார் 100 மில்லியன் டொலர் நிதி சந்தையில் புழக்கத்திற்கு விடப்பட்டமையினாலேயே தற்போதுவரை ரூபாவின் பெறுமதி 200 ஆகப் பேணப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் தூற்றிக்கொண்டிருக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் சேமிக்கப்பட்ட நிதியே அதுவாகும். அந்த நிதியின் ஊடாகவே தற்போது ரூபாவின் பெறுமதி ஓரளவிற்கேனும் குறித்த மட்டத்தில் பேணப்படுகின்றது.

இவ்வருடம் நாம் சுமார் 7000 மில்லியன் டொலர் கடனை வெளிநாடுகளுக்கு மீளச்செலுத்தவேண்டியுள்ளது. எனினும் இதனைச் செலுத்த முடியாத நிலையிலேயே நாடு இருக்கின்றது.

உள்நாட்டு உற்பத்திற்கு மேலதிகமாக சுமார் 550,000 டொன் சீனி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. கடந்த 13 ஆம் திகதி ஒரு கிலோகிராம் சீனியின் விலை 85 ரூபா என்று அரசாங்கம் அறிவித்தது.

அதற்காக சீனி மீது விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா வரி நீக்கப்பட்டது. அதேவேளை அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் கப்பல் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனூடாகக் கொண்டுவரப்பட்ட சீனி களஞ்சியசாலையை அடைந்தது. கடந்த 2020 அக்டோபர் 13 இலிருந்து இவ்வருடம் ஜனவரி 13 வரையான காலப்பகுதியில் சுமார் 230,000 டொன் சீனி நாட்டை வந்தடைந்தது.

சுங்கத்திணைக்களத்தில் இதனைப்போன்ற ஊழல் எப்போதும் நடைபெற்றதில்லை. அதனூடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான நிதியினளவு 8 பில்லியன் ரூபாவாகும். அதற்காக உலகவங்கியிடம் அரசாங்கம் கடன் கோரிக்கையொன்றையும் முன்வைத்தது.

ஆனால் சீனி இறக்குமதியின் ஊடாக இடம்பெற்ற ஊழல் (10 பில்லியன் ரூபா) அந்தத் தொகையையும் கடந்துள்ளது. பொருளாதாரத்தை சீர்குலைத்ததாகக் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றத

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *