இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளதாகவும் இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன் சிக்கிம் மாநிலத்தில் நாகு லா எனுமிடத்தில் சீன இராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களை இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்திச் சண்டையிட்டு விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், கைகலப்பில் சீன ராணுவ வீரர்கள் 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சீன வீரர்கள் துரத்தியடிக்கப்பட்டதால் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிக்கிம் எல்லையில் சீனப் படையினருடன் நிகழ்ந்த மோதல் குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஜனவரி 20ஆம் நாள் சிக்கிமின் நாகு லா எனுமிடத்தில் இந்திய இராணுவ வீரர்களுக்கும் சீன இராணுவ வீரர்களுக்கும் சிறு மோதல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் தலையீட்டுக்குப் பின் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாகவும், பேசித் தீர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது