இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாட்டில் பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பிரதமரை சீன தூதுவர் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, சீனாவிடம் இலங்கை நெருங்கிச் செல்வதாகவும், சீனாவின் காலனியாக இலங்கை மாறிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.