கடந்த வாரம் பாக்கிஸ்தானில் டாஸ் நீர் மின்உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது சீன பிரஜைகள் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தானில் தனது நாட்டவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பாக்கிஸ்தான் அரசாங்கம் ஆராயவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரசீட் அகமட்டை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜாவோ கெஜி சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டமை குறித்து ஆராய்ந்துள்ளார்
சீன பிரஜைகள் மீதான தாக்குதல் குறித்து சீன அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாக்கிஸ்தான் மேற்கொண்ட விசாரணைகளின் போது பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளதாக சீன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்த அட்டுழியத்தை இழைத்த அமைப்பு நபர்களை கடுமையாக சீனா கண்டிக்கின்றது என தெரிவித்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜாவோ கெஜிஇந்த விசாரணையில் உதவுவதற்காக சீனா தனது விசாரணையாளர்களை பாக்கிஸ்தானிற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கான கடுமையாக தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் முன்னெடுக்கும் என சீன அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பாக்கிஸ்தானில் பணியாற்றும் சீன பிரஜைகள்,சீன நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை பாக்கிஸ்தான் இனம்காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீன அமைச்சர் நாட்டின் முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படு;த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சீன பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கும் அனைத்து நடவடிக்கைளையும் எடுக்குமாறும் சீன அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.