அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்ட 16 குழுக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
எவ்வாறாயினும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தம் நடைமுறையில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற ஆபத்தான நோயாளர்களுடன் நெருக்கமாகக் கையாளும் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.