சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகளை எடுக்கும் கட்டாய காலம்

சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகளை எடுக்கும் கட்டாய காலம்

கடந்த கிழமை 300க்கும் மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது என பல்சமய இல்ல உறுப்பினரும்,மொழிப்பெயர்ப்பாளருமான சிவகீர்த்தி தில்லையம்பலம் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சுவிற்சர்லாந்தின் நலவாழ்வு (சுகாதார) சூழல் இடர்நேரக்கூடிய வாய்ப்புடன் உள்ளது. பெரும் அறுவை மருத்துவம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நேர்ச்சி (விபத்து) ஏற்பட்டாலும் விரைந்து மருத்துவம் செய்வதற்கு மருத்துவமனைகளில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது இடர்நேர் சூழலாக நோக்கப்பட்டிருந்தது.

சுவிற்சர்லாந்து நடுவனரசு இதன்காரணங்களால் பெரும் கட்டுப்பாடுகளை அல்லது இறுக்கங்களை அறிவிக்கலாம் அல்லது சிறு முடக்கம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 17. 12. 21 இன்று நடைபெற்ற நடுவனரசின் ஊடகசந்திப்பில் 20. 12. 21 திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் புதிய இறுக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *