சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அது ஓமிக்ரோன் வகை கொரோனாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அந்த பிள்ளை பயிலும் வகுப்பிலுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் பள்ளி அலுவலர்களும், பிள்ளைகளின் பெற்றோரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் அனைவருக்கும், ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதை அறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. Meyrin என்ற இடத்தில் உள்ள De-Livron school என்ற பள்ளியில் உள்ள வகுப்பு ஒன்றில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை சுவிஸில் சிலருக்கு மட்டுமே ஓமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், Omicron வகை கொரோனாவை உறுதி செய்வதற்கான சோதனை முடிவுகள் வெளியாக ஒரு வாரம் வரை ஆகும் என்பதால், மேலும் எத்தனை பேர் Omicron வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உறுதிசெய்ய ஒருவாரம் காத்திருந்துதான் ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.