சூடானின் ராணுவம் நேற்று முன்தினம் அந்நாட்டின் ஆட்சியைக் கவிழ்த்து பிரதமர் மற்றும் அமைச்சர்களை சிறைப்பிடித்து உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் அத்துடன் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 140 பேர் காயமடைந்துள்ளனர்
இதேவேளை தலைநகர் கார்ட் டூமில் வீடு வீடாக சென்று உள்ளூர் போராட்ட அமைப்பாளர்களை ராணுவத்தினர் கைது செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது ராணுவத்தின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் வெளிப்பட்டு வருகின்றன அத்துடன் அமெரிக்கா அறிவித்திருந்த 700 மில்லியன் டொலர் நிதி உதவியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.