எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. 1869-ம் ஆண்டு திறக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.
