எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதன்படி ‘செழிப்பான நாளை வளமான தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில், தேசிய சுதந்திர தின வைபவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் 4 ஆயிரத்து 325 இராணுவத்தினரும், 868 கடற்படையினரும், 945 வான் படையினரும், ஆயிரத்து 382 காவல்துறையினரும், 515 சிவில் பாதுகாப்பு படையினரும், மாணவ வீரர்கள் 355 பேரும் பங்கேற்கவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.