சைனாவுடனான ஜோ பைடன் குடும்பத்தின் மறைமுகத்  தொடர்புகள்

சைனாவுடனான ஜோ பைடன் குடும்பத்தின் மறைமுகத் தொடர்புகள்

தேர்தல் தெரிவுக் குழுவால் (electoral college) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டும் இதுவரை உறுதிப்படுத்தப்படாதா நிலையில் இருக்கும் திரு ஜோ பைடன் (Joe Biden) சைனாவை ஆதரிக்கும் நபர் என்பது யாவரும் அறிந்ததே.  அண்மைய  காலங்களில் அவரது மகன் கண்டர் பைடனின்  (Hunter Biden) தப்பான வியாபார தொடர்புகள் பற்றிய சர்ச்சை தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றது.

 மேலும்  ஜோ பைடன்(Joe  Biden)  அவர்களின் மூத்த சகோதரன் ஜேம்ஸ் பைடன் (James Biden)  இளைய சகோதரன் பிராங்க் பைடன் (Frank Biden) ஆகிய இரு சகோதரரும்கூட, பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் வாங்கியதோடு  பல முதலீட்டு ஸ்தாபனங்களின் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட மூவரும் ஜோ பைடன் அவர்கள்,பராக் குசெய்ன் ஒபாமா (Barack  Hussein Obama) அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்திலே, ஜோ பைடன் அவர்கள் உதவி ஜனாதிபதியாக கடமை புரிந்தார், இந்த காலகட்டத்திலேயே இவர்கள் இத்தொகை பணத்தை சம்பாதித்தனர்.

உதவி ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் வெளிநாடுகளுக்கு அரசாங்க அலுவல்களுக்காக பிரயாணங்களை மேற்கொள்ளும்போது, அவருடைய மகன் கண்டர் பைடன் (Hunter Biden) தகப்பனாரோடு ஏயார்போஸ்  2 ( Air Force – 2) விமானத்தில் சென்று தனது வியாபார தொடர்புகளை உருவாக்குவார். ஜோ பைடனின் குடும்பத்தில் பணம் குவித்தவர்களில் அவரது மருமகன் ஹவாட்டும்  (Howard), மகள் வலரி (Valerie) யும் அடங்குவர். ஈராக் யுத்தத்தின் பின்பு, ஏற்படுத்தப்படட புனரமைப்பு கட்டுமானப் பணி நடைபெற்றபோது  பல முதலீட்டாளர்கள்  பெயரில்  பைடன் குடும்பத்தினர் பல நூறு கோடிகள் சேர்த்தனர்.  

பல நாடுகளிலும் இரகசிய வியாபார நடவடிக்கைகளில் கண்டர் பைடன் (Hunter Biden) ஈடுபட்டிருந்தாலும் சைனாவுடனான தொடர்பு அமெரிக்க மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தம் நாட்டை விற்று, தம் குடும்பங்களுக்கு சேவை செய்வதே இன்றைய வழக்கமாகிவிட்டது. தமிழ் நாட்டின் முதலமைச்சர் காமராஜரைப் போன்றவர்கள் தலைவர்கள் இனியும் தோன்றுவார்களா?  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *