சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பிறகு 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், 35 பேர் இன்னமும் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் Kemerovo பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்திலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை 11 பேர் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்றே தெரியவந்துள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் காயங்கள் காரணமாக உடனையே மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீத்தேன் வாய் கசிவு ஏற்படலாம் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகள் தரப்பில் வேலையை நிறுத்த கோரவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காற்று வெளியேறும் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்தும் நேர்ந்துள்ளது. சுரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணச் செயலிழப்பு அல்லது இயற்கை காரணங்களாக இருக்கலாம் வெடிப்புக்குக் காரணம் என உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கடுமையான குளிர் என்பதால் மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி இதுவரை 236 பேர்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டாலும், 75 பேர் இன்னமும் அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிரது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள் தரப்பு 45 பேர்கள் என்றே தெரிவித்துள்ளது.