ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட சஜித்!

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட சஜித்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், பொரளை கனத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் முஸ்லிம்களின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள போதிலும், அரசு வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முஸ்லிம்களின் நல்லடக்க உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டியது பிரதான எதிர்க்கட்சியான எங்களின் கடமை என்றும் அந்தக் கடமையை சரியாக நிறைவேற்றுவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *