தற்போது நடைபெற்றுவரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பற்கேற்றுள்ள அதிகாரிகள் மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்ற அனுமதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருந்தாலும், சுவிஸ் பொலிசார் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றுவதை நிறுத்தவில்லை.
விடுதலைப்புலிகளின் கொடி மனித உரிமைகள் பேரவையின் முன்னுள்ள ஒரு சுரங்க சின்னம் அருகே ஏற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையும் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜெனிவா நகரில் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடிகளுடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.