ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று.அங்கு 36 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 87 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதேவேளையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டு விட்டது.

இதன் பலனாக அங்கு கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அந்த நாட்டு அரசு அறிவித்து வருகிறது.ஜெர்மனி முழுவதும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை பல மாதங்களுக்குப் பின் மீண்டும் வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *