ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

மிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ள்து ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமாஅதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்கள் தொடர்புள்ளவர்கள் வரலாற்று துஸ்பிரயோகங்களிற்காக தொடர்ந்தும் தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமையை அனுபவிப்பது தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.பொறுப்புக்கூறப்படுதல் இல்லாமல் இலங்கையால் தனது வரலாற்றின் இருண்ட பக்கங்களை கடந்து போக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை குறித்து அதிகாரிகள் புதிய விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எனினும் கடந்தகாலத்தில் உள்நாட்டு பொறிமுறைகள் அடைந்த தோல்விகளால் அதனை எதிர்பார்க்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தைமுடிவிற்கு கொண்டுவருவதற்கும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *