ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ விருது

ஜோர்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு ‘புலிட்சர்’ விருது

அமெரிக்க காவல்துறையால் கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப் பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதைப் போல ஊடக, புகைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது ‘புலிட்சர்’ விருது. அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912ஆம் ஆண்டு முதல் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை மின்னிகியூ பொலிஸ் நகர காவல்துறை அதிகாரி கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை 18 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா பிரேஸர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ உலக அளவில் பேசு பொருளானது. இதையடுத்து இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை கௌரவப்படுத்தும் நோக்கில், அவருக்கு சிறப்பு ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தனது அற்புதமான படங்கள் மூலம் 2 பிரிவுகளில் ‘புலிட்சர்’ விருதை தட்டி சென்றார் ஸ்பெயினைச் சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்படக் கலைஞர். இவர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு தீவிரமான மக்கள் போராட்டங்களின் போது சற்றும் பதற்றம் இல்லாமல் எமிலியோ பதிவு செய்த படங்கள் அவருக்கு இரண்டு ‘புலிட்சர்’ விருதுகளை பெற்று தந்துள்ளன.

இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்டர் நிறுவனத்திற்கும் ‘புலிட்சர்’ விருது சென்றுள்ளது. டானியா லியோன் என்பவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *