முன்னைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) புளொறிடா (Florida) மானிலத்தில் தன் நாட்டு மக்களுக்கு தனது சேவையைத் தொடர்வதற்காக புதிய காரியாலயம் திறந்துள்ளார். “ஜனாதிபதியின் காரியாலயம்” (Office of the Former President) என இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் பல கிளைகள் ஏனைய மாவட்டங்க்களிலும் திறக்கப்படவுள்ளன. டொனால்ட் ட்றம்ப் அவர்களின் பிரியாவிடைப் பேச்சு ஒரு புதிய நல் வருகையைக் குறித்த பேச்சாக இருந்ததை எவரும் கவனிக்கத் தவறவில்லை. இதுமட்டும் அல்லாமல் “தேச பற்றுக் கட்சி” (Patriotic Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அனேகர் பேசிக்கொள்கின்றனர்.
தேர்தல் திணைக்கள பதிவின்படி “தேச பற்றுக் கட்சி” (Patriotic Party ) என்ற ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது ட்றம்ப் அவர்களின் பெயரில் இல்லை என்றும் கூறப்படுகின்றது, ஆனாலும் வேறு சிலர் வரவிருக்கின்ற இடைக்கால கொங்க்றஸ் தேர்தலின்போது குடியரசுக் கட்சியின் சார்பாகவே தேர்தலில் ஈடுபட்டு கட்சியைப் பெலப்படுத்துவார் என்றும் கூறப்படுகின்றது.
எது எப்படியாக இருந்தாலும் டொனால்ட் ட்றம்ப் அவர்களின் அரசியல் ஆட்சி பலங்கொண்டு மறுபடியும் தோன்றும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.