இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியானது ஏற்றுமதித் தொழிலை பாதித்துள்ளதாக ஏற்றுமதியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நாளிதழின் படி, ஏற்றுமதிக்கான கப்பல் கட்டணங்கள் டொலர்களில் செலுத்தப்பட வேண்டும் மற்றும் உள்ளூர் வங்கி அமைப்பில் டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக, அந்த கட்டணத்தை செலுத்துவதற்கு டொலர்களை பெற முடியவில்லை.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தமது கவலைகளைத் தெரிவிக்கவும் ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல கப்பல் நிறுவனங்கள் இன்னும் இலங்கைக்கு வரவில்லை என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பல வருடங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.