இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனிக்கு நிகராக அவரது ஹெலிகாப்டர் ஷாட்டும் பிரபலமான ஒன்று.
ஆனால் இதன் பின்னர் டோனியின் உயிர் நண்பரான சந்தோஷ் லால் என்பவர் இருப்பது ஒரு சிலருக்கே தெரியும்.
ஆம், டோனியும், சந்தோஷ் லாலும் மிக நெருங்கிய நண்பர்கள், டோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக்கொடுத்ததே சந்தோஷ் லால் தானாம்.
இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் போது, டென்னிஸ் பந்துகளை பயன்படுத்தி விளையாடுவார்களாம்.
சந்தோஷின் பேட்டிங் மீது டோனிக்கு அலாதி பிரியம், சந்தோஷ் ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடுவதை முதலில் பார்த்த டோனி, அதுபற்றி சந்தோஷிடம் கேட்டுள்ளார்.
சந்தோஷ் இந்த ஷாட்டை ‘ஸ்லாப் ஷாட்’ என்று அழைத்தாராம், கஷ்டப்பட்டு இந்திய அணியில் இடம்பிடித்த டோனி, ஒருநாள் சுற்றுப்பயணம் செல்லவிருந்த போது, சந்தோஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையறிந்த டோனி, உடனடியாக நண்பரின் உயிரை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக வானிலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு விமான ஆம்புலன்ஸால் செல்ல முடியவில்லை.
அதற்குள் சந்தோஷின் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாய் உயிரும் பிரிந்தது, சரியான நேரத்தில் தனது நண்பனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கம் இன்றும் டோனிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.