ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம்

ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம்

ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என தேர்தல் கல்லூரியினால் முறையாக அறிவிப்பப்பட்டுள்ளதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்திவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வது கடினம் என்று கூறினார்.

அத்துடன் தேர்தல் மோசடி குறித்த ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும் இதன்போது மீண்டும் முன்வைத்தார்.

அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தேர்தல் கல்லூரி முறையின் கீழ் பைடனுக்கு 306 வாக்குகளும், ட்ரம்புக்கு 232 வாக்குகளும் தேர்தலின் முடிவில் கிடைத்துள்ளது.

அதனால் ஜனாதிபதியாவதற்கு தேவையான 270 ஐ விட பைடன் அதிகபடியான வாக்குகளை பெற்றார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந் நிலையில் இறுதியாக ட்ரம்ப், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனின் அணிக்கு முறையான மாற்றத்தை அனுமதிக்க இந்த வார தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட நிலையிலேயே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தற்போது முடிவுசெய்துள்ளார்.

எனினும் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்வது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *