தடுப்பூசி இன்றியமையாதது- டாக்டர் ஜூட் ஜெயமஹா

தடுப்பூசி இன்றியமையாதது- டாக்டர் ஜூட் ஜெயமஹா

எதிர்காலத்தில் எந்த திரிபு வந்தாலும், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி மிகவும் முக்கியமானது. டெல்டா பிளஸ் திரிபு இலங்கையில் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், இந்த சாத்தியமான அச்சுறுத்தலுக்கு இலங்கை கவனம் செலுத்த வேண்டும், தேசிய காய்ச்சல் மையத்தின் ஆலோசகர் மருத்துவ வைரலாஜிஸ்ட்(Virologist),டாக்டர். ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: தற்போது டெல்டா பிளஸ் பலம் வாய்ந்ததாகவும் ஆதிக்கம் செலுத்துமா அல்லது பலவீனமாகி போகுமா என்பதை அறிய நாடுகளின் குழு ஆய்வு நடத்துகிறது.

டாக்டர் ஜெயமஹா டெல்டா பிளஸ் வேரியன்ட் டெல்டா வகையை விட 10 சதவிகிதம் அதிகமாக பரவுகிறது என்றும் மக்கள் எல்லா நேரங்களிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும்,ஏனெனில் அவற்றைப் புறக்கணிப்பது நெருப்புக்கு எரிபொருளைச் சேர்ப்பதைப் போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் பல்வேறு கிருமிநாசினிகள் தெளிப்பது பயனற்ற செயல், ஏனென்றால் கோவிட் -19 வைரஸ் நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகளில் இல்லை. அவற்றை தரையில் அல்லது பொது இடங்களில் தெளிப்பதால் பயனில்லை.டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *