தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம்

தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம்

கொரோனா தடுப்பூசி உட்பட பிற மருந்துகள் தொடர்பான வர்த்தக ரகசிய ஆவணங்களை பெண் ஊழியர் ஒருவர் திருடிச் சென்றதாக ஃபைசர் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா தடுப்பூசி டோஸ்களை உலக நாடுகளுக்கு வர்த்தகம் செய்துவரும் முக்கிய நிறுவனம் ஃபைசர். ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்கா உட்பட பல முன்னணி நாடுகள் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியையே தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகிறது.இந்த நிலையில் தங்களது முன்னாள் ஊழியர் ஒருவர் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், தற்போது நீதிமன்ற வழக்கும் தொடர்ந்துள்ளது ஃபைசர்.

அதில், Chun Xiao Li என்பவர் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எனவும், அவர் மிக முக்கியமான மொத்தம் 12,000 தரவுகளை திருடிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஃபைசர் நிறுவனம் அவரது பயன்பாட்டிற்காக அளித்திருந்த மடிக்கணினியில் இருந்து இரகசிய ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி, அதனை பின்னர் தமது தனிப்பட்ட கருவிகளில் பகிர்ந்து கொண்டதாகவும், குறித்த சம்பவம் அக்டோபர் மாதம் இறுதியில் நடந்துள்ளது எனவும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி Li என்பவர் அடையாளம் காணப்படாத 5 நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வந்தார் எனவும், ஃபைசர் நிறுவனம் அளித்த மடிக்கணினி, குறித்த 12,000 ஆவணங்களுடன் தற்போதும் அவர் வசமே உள்ளது எனவும், அதுபோன்றதொரு போலியை அவர் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Li தங்களின் போட்டி மருந்து நிறுவனமான Xencor உடன் வேலை தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும், இது உண்மையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், தங்களின் வர்த்தகம் மற்றும் வெற்றியின் இரகசியங்களை அவர் வேறு எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்வதை தடை செய்ய வேண்டும் எனவும் ஃபைசர் கோரிக்கை வைத்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *