கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உதவியை நாடவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆரம்ப சுகாதார, தொற்று நோயியல், கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் களின் பட்டியல்களைப் பெற்று அவர்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள சுகாதார அமைச்சு தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.