தடுப்பூசி விவகாரத்தில் கோட்டாபய தலையீடு செய்தாரா?

தடுப்பூசி விவகாரத்தில் கோட்டாபய தலையீடு செய்தாரா?

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலையீடு செய்ததாக வெளியான தகவலை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு பொதுவாக மூன்று மாதங்கள் செல்லும். இது தடுப்பூசி உருவாக்குநர்கள் சமர்ப்பித்த தரவின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அமையும். இதனால் ஒப்புதலுக்கு அதிக காலம் எடுக்கும்.ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு, ஒப்புதல் அளித்ததற்கான பெருமையை இலங்கை தம்வசப்படுத்தியிருந்தது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்துரையாடியதன் விளைவாகவே சீனாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை ‘சூம்’ மூலம் உலக சுகாதார அமைப்பின் இயக்குநருடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, அதே மாலையில் சினோபார்ம் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று , ரத்நாயக்க கூறியிருந்தார்.

எனினும் உள்நாட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் நாடுகளின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன, ஆனால் அவை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல என்று அந்த அமைப்பு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *