தமிழர் தரப்புக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

தமிழர் தரப்புக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது – அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதனை வெளிக்கொணரும் வகையில் வடக்கு கிழக்கில் செயல்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிக்கின்றது.

வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமை உள்ளிட்ட செயல்பாட்டாளர்களின் பேச்சுரிமை மீறல் ஆகியவற்றோடு,

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு எமது ஆதரவோடு, அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *