அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட நீர்த்தாங்கியை அகற்ற பிரதேச மக்கள் அதிகாரிகளின் உதவியை நாடினர்.
அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்தினரின் உதவியுடன் நீர்த்தாங்கியை தகர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி இன்று காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்,மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்,அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் சென்று அப்பகுதி மக்களை பாதுகாப்புக்காக வெளியேற்றினர்.
அதன் பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் குறித்த நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை குறித்த நீர்த்தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக அந் நீர் தாங்கியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்தாங்கி இன்று தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட நீர்த்தாங்கியை அகற்ற பிரதேச மக்கள் அதிகாரிகளின் உதவியை நாடினர்.
அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்தினரின் உதவியுடன் நீர்த்தாங்கியை தகர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி இன்று காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்,மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன்,அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் சென்று அப்பகுதி மக்களை பாதுகாப்புக்காக வெளியேற்றினர்.அதன் பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் குறித்த நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.