தமிழ் மக்களுக்கு நினைவு கூறும் உரிமை உண்டு -நிலாந்தன்

நினைவுகூர்தல் உரிமை என்பது நிலைமாறுகால நீதிக்கு கீழ் இழப்பீட்டு நீதிக்குள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை. ஒவ்வொருவருக்கும் தன்னுடையவரை நினைவு கூர உரிமை உள்ளது. இந்த இடத்தில் நினைவு கூர்தலின் பல்வகைமையை நாங்கள் ஏற்க வேண்டும்.

2009 க்குப் பின் புலிகள் அல்லாத ஏனையவர்களை நினைவு கூர்வதில் பிரச்சினை இல்லை. புலிகளை நினைவு கூர்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. ஆனால், நிலைமாறுகால நீதிக்கு கீழ் அது நினைவு கூர்தல் என்று தான் பார்க்கின்றதே ஒழிய யார் இயக்கம் என்று பார்க்கவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூர்தல் என்று தான் அது பார்க்கின்றது. நினைவு கூரும் உரிமை நிலைமாறுகால நீதிக்கு கீழ் இருந்தது. இப்போது அது மறுக்கப்படுகின்றது. என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் மட்டும் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனைய இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களையெல்லாம் நினைவு கூருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஜே.வி.பி கூட தன்னுடைய தோழர்களின் நினைவு கூர்தலை பிரமாண்டமாக செய்யும். இதற்கெல்லாம் அவர்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. மாவீரர்களை நினைவு கூர்வதில் தான் இங்கே பிரச்சினை.

நினைவு கூர்தல் உரிமை என்பது ஐக்கியநாடுகள் சபையால் கூட அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால், இலங்கை அரசாங்கம் அதற்கு தடை விதிக்கின்றது. இதன்மூலம் அரசாங்கம் தமிழ்மக்களுடன் நல்லிணக்கத்துக்கு தயார் இல்லை என்பதனையும் வெளிக்காட்டுகின்றது.

நல்லிணக்கம் என்பதன் முதல் விடயமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அதற்கான வழிவகைகளை செய்து கொடுப்பதாகும். தங்களது துயரங்கள் தொடர்பாக அவர்கள் அழுது உளவியல் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதற்கு இடம் கொடுக்க வேண்டும். அந்த இடம் பலவந்தமாக இங்கே மறுக்கப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயம். நினைவு கூரல் உரிமை மறுக்கப்படுவது ஒரு மனித உரிமை மீறல். என அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *