தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்கும் அரசு!

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்கும் அரசு!

அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்குகின்றது என்பதையே நினைவித்தூபி அழிப்பு விடயம் எடுத்தியம்புகின்றது.அரசின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருக்கின்றன என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என். நகுலேஸ் தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியினை உடைத்ததன் ஊடாக இந்த அரசு தன்னுடைய கொடூரத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதுடன், தமிழ் மக்கள் மனதில் மேலும் வெறுப்பினை ஏற்படுத்துகின்றது.எமது தமிழ் மக்கள் அவர்களது உடமைகளை இழந்து உறவுகளான கணவன், மனைவி, சகோதரர், பிள்ளைகளை இழந்து தவித்து அந்த நினைவுகளை மறக்க முடியாத சூழ்நிலையிலும் இன்றுவரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர்களை நினைவுகூர்ந்து தங்கள் துயரங்களைப் பகிர்வதற்கும் இந்த அரசின் கீழ் முடியாமல் இருக்கின்றது.அவர்களது ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தி மனநிம்மதி அடைவதற்கும் இடமளிக்காது தற்போது கொரோணவைச் சாட்டி அவற்றைத் தடுத்து வந்ததும் இல்லாமல், தற்போது நினைவுச் சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளது.

இவற்றினூடாக அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைத் தீவிரமாக்குகின்றது என்றே பொருள்படுகின்றது.அத்துடன் இறந்தவர்களை நினைவுகூருவதைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த அரசின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த அரசு மறந்துவிடக் கூடாது என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *