தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி

தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி

பிட்டு, வடை, சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களை பீட்சா உண்ணும் நிலைமைக்கு கொண்டு வந்தோம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சில நாட்களுக்கு முன் யாழ் நீதிமன்றில் மன்றுரைத்திருந்தார்.

இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு, மீம்ஸ்கள் மற்றும் ரைட்டப்கள் மூலமாக இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் கூட பிரசாத் பெர்னாண்டோக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால், இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையன அரச சட்டவாதி, “இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்து, எந்த இன மக்களின் உணவு பழக்க வழக்கம் அல்லது நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தால், அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்” என அறிவித்தார். இதன்போது எழுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *