எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த ஐ.நா ஆணையாளரது அறிக்கை தொடர்பில் கருத்தினை வெளியிடும் போதே இதனை தெரிவித்தள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரை உற்சாகத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா ஆணiயாளரு அறிக்கையில் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையே முதன்மையான தெரிவித்திருக்கின்றார். இதற்கு பின்னராகத்தான் பிற பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
‘சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழர்கள் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டாக இதனை கோரியுள்ளதோடு, காணாமலாக்கப்பட்ட உறிவினர்கள் பாதிக்கப்பட்ட மக்களும் கோரியியுள்ளனர் ‘ என அறிக்கையில் மனித உரிமைச்சபை ஆணையாளர் அதனை குறிப்பிட்டிருக்கின்றார்.தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டுக்காக தமிழர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளோம்.
2015ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டி மில்லியன் கையெழுத்து போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. அவ்வேளையில் தாயக மக்கள் உட்பட 1.5 மில்லியன் பேர் கையொப்பமிட்டிருந்தார்கள். அதுவொரு முக்கியதொரு தொடக்கம். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு சர்வதேச சட்டவாளர்கள் ஆணையம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில சிறிலங்காவை பாரப்படுத்தச் சொல்லியிருந்தது. அடுத்து மனித உரிமைச்சபையின் முன்னாள ஆணையாளர் உசேன், தனது அறிக்கையில் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களில் ஒரு தரப்பிடம் வலுவாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்று ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரர் தனது பரிந்துரையாக நேரடியாகவே இதனை தெரிவித்துள்ளார். இது எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது
ஐ.நா மனித உரிமைச்சபை நாடுகளை நோக்கிய ஐ.நா ஆணையரது இந்த பரிந்துரையினை அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது பூகோள அரசியலை சார்ந்து காணப்படுகின்றது. ஆணையாளது பரிந்துரையினை அந்நாடுகள் நிராகரிக்க முடியாது என்றே நம்புகின்றேன். அதற்கான நாம் உழைக்க வேண்டும். அந்த 47 நாடுகளில் முக்கியமான நாடுகளை அடையாளங்கண்டு கடுமையாக தமிழர் தரப்பு உழைக்க வேண்டும்.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது பரிந்தரையினை மையப்படுத்தியே பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
இதேவேளை ஆணையாளரது அறிக்கையில் நமக்கு முழுயைமான உடன்பாடு இல்லை. குறிப்பாக நடந்தேறிய பாரிய மனித உரிமைமீறல்கள் ‘மீளநிகழாமை’ தொடர்பில் அங்கத்துவ நாடுகள் ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டவர்கள்தான் அந்த பொறிமுறையினை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.