திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு

திரிபடைந்த அல்பா கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையில் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் திரிபடைந்த கொவிட் வைரஸால்(B117 -அல்பா) பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளர்கள் இலங்கையின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் படி, பாதிப்புற்ற நோயாளர்கள் மட்டக்களப்பு,திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டி மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்திய கொவிட் திரிபு எனக் கருதப்படும் B.1.617.2(டெல்டா) வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவர் வாதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குறித்த நபர் இந்தியாவிலிருந்து இங்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *